headlines

img

விளம்பரத்தாலே உயர்ந்தவர் வளர்ச்சி நிரந்தரமாகாது

பத்தாண்டு பாஜக  ஆட்சியும் பிரதமர் மோடி யின் செயல்பாடுகளும் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிவிட்டன. 2014இல் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சி நாயகன் ‘பில்டப்’ பிம்பம் மதிப்பிழந்துவிட்டது. மக்களின் சேவகன் என்ற கூற்றும் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டது.

வாக்குறுதிகளை நிறைவேற்றி நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாததால் வெளிநாடுகளில் புகழ்கிறார்கள் என்று ‘பில்டப்’ பை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியிருக் கிறார்கள் பாஜகவினர். உள்ளூரில் விலை போகாத சரக்கை வெளிநாட்டு விளம்பர வெளிச்சத்தில் விற்கத் துடிக்கிறார்கள், பாவம்! இந்த முறை அவர்களுக்கு கிடைக்கப் போவதோ பட்டை நாமம்!

கடந்த ஆண்டிலேயே ஜி20 உச்சிமாநாடு நடந்த போதே, ஏதோ உலகத்துக்கே தலைமைப் பொறுப்பை ஏற்றுவிட்டதாக தம்பட்டம் அடித்தார்கள். அது அடுத்தடுத்து சுற்றுக்கு வரும் பதவி என்பதை மறைத்துவிட்டு வெற்று விளம்பரம் செய்தார்கள். இப்போது தேர்தல் காலம் என்பதால் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் போன்றவர்கள் உலகளாவிய பெயரும் புகழும் மோடிக்கு கிடைத்திருப்பதாக உரை நிகழ்த்துகிறார்கள்.

பிலிப்பைன்ஸ் மோடியைப் பாராட்டு கிறது; கத்தார் புகழ்கிறது; ரஷ்யாவும் உக்ரைனும் மோடி சொல்லுக்கு மதிப்புக் கொடுக்கின்றன; அமெரிக்கா, பிரிட்டன் கூட இந்தியாவுக்கு மரி யாதை தருகின்றன என்று ஆளாளுக்கு கதை யளக்கிறார்கள். ஊடகங்களையே சந்திக்காத மோடி, ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளிக்கிறார். அதில் இந்தியர்களை மீட்க ரஷ்யாவும் உக்ரைனும் உதவி செய்தன என்று கூறுகிறார். அதுமட்டுமின்றி, தொழிலதிபர் எலான்மஸ்க் உங்களது ரசிகர் என்று கூறி யிருக்கிறாரே என்ற கேள்விக்கு, அவர் எனது ரசிகர் கிடையாது; இந்தியாவின் ரசிகர் என்று சொல்கிறார் மோடி.

இதுபோன்ற அதீத கூவல்கள் வெளிநாட்டில் வாழும் பாஜகவினரால் செய்யப்படுகின்றன. அவை அவரது வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளிப்படும். ஆனால் தற்போது அமெரிக்காவில் 16 நகரங்களில் பாஜகவினர் மோடியை ஆதரித்துப் பேரணி நடத்தியிருக் கிறார்கள் என்று செய்தி வெளியிடப்படுகிறது. எங்கெங்கு ஆதரவுப் பேரணி நடத்தினாலும் இந்திய மக்கள் தான் வாக்களித்து தேர்வு செய்ய வேண்டியவர்கள் என்பதை வரும் தேர்தல் கட்டா யம் உணர்த்தும். கடந்த முறை நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நானே வெற்றி பெறு வேன் என்று டிரம்ப் கூறியது பொய்த்து ஜோ பை டன் வென்றார் என்பது அண்மைக்கால வரலாறு. அதுபோன்றே இந்தியாவில் பாஜக தோற்கும்; இந்தியா கூட்டணி வெல்லும்! விளம்பரத்தாலே உயர்ந்தவர் வளர்ச்சி நிரந்தரமாகாது!

;