india

img

மியான்கஞ்ச்சை மாயாகஞ்ச் என மாற்றும் உ.பி. பாஜக அரசு.... தொடரும் இஸ்லாமிய அடையாளம் அழிப்பு...

லக்னோ:
உத்தரப் பிரதேச மாநிலத்தில், கடந்த 2017-இல் ஆட்சிக்குவந்த நாள் முதலாகவே, இஸ்லாமிய அடையாளத்திலான பெயர்களை இந்து அடையாளத்திற்கு மாற்றும் வேலையை, ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.பைசாபாத், அயோத்யா என்றும், அலகாபாத் பிரயாக் ராஜ் என்றும், மொகல்சராய் என்பது, பாஜக தலைவரின் பெயரில் தீன்தயாள் உபாத்யாயா நகர் என்றும் மாற்றப்பட்டது.இவற்றுக்கு அடுத்ததாக, உன்னாவ் மாவட்டத்திலுள்ள மியான்கஞ்ச் என்ற நகரத்தின் பெயரை மாயாகஞ்ச் என்று மாற்றும் முயற்சியில் உ.பி. பாஜகஅரசு தற்போது இறங்கியுள்ளது.

கடந்த 2017-இல் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்திற் காக மியான்கஞ்ச் வந்திருந்தபோது, ஊர்ப் பெயரை மாயாகஞ்ச் என்று மாற்றுவதாக ஆதித்யநாத் உறுதி அளித்திருந்தார் என்று கூறப்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, பாஜக எம்எல்ஏ பம்பா லால்திவாகர் அண்மையில் விடுத்தகோரிக்கையின் அடிப்படையில், பஞ்சாயத்து தலைவர் நக்மா தலைமையில் கூடிய பஞ்சாயத்துக் கூட்டத்தில், மியான்கஞ்சை ‘மாயாகஞ்ச்’ என்று மாற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாயத்து நிர்வாகத்தின் இந்த தீர்மானத்தை உன்னாவ் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவீந்தரா குமார் அரசுக்குத் தற்போது அனுப்பி வைத்துள்ளார்.

அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் அமைந்த அலிகர் நகரின் பெயரை ‘ஹரிகர்’ எனவும்,பெரோஸாபாத்தை, சந்திரா நகர்-மெயின்புரியை மாயன் நகர் என மாற்றவும் ஏற்கெனவே அரசுக்கு தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் சஹரான்பூர் மாவட்டத்திலுள்ள தியோபந்த் என்ற பெயரை, ‘தேவ்ரந்த்’ என மாற்றவேண்டும் என்று இத்தொகுதி பாஜக எம்எல்ஏ பிர்ஜேஷ்சிங் விடாமல் வலியுறுத்தி வருகிறார். தியோபந்தில் தாரூல் உலூம் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பழம்பெரும் மதரசாக்கள்அமைந்துள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.

;