india

img

தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதால் கொரோனா மூன்றாம் அலை தீவிரமாக இருக்காது ... ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்...

புதுதில்லி:
இந்தியாவில் இரண்டாம் அலை அளவுக்கு கொரோனா மூன்றாம் அலை தீவிரமாகஇருக்காது என்றும்  இதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்)  தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:

முந்தைய நோய்த் தொற்றிலிருந்து உருவான நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக இழக்கும்வரை புதிய அலையால் தாக்கம் இருக்காது. இந்தியாவில் இரண்டாம் அலை அளவுக்கு மூன்றாம் அலை தீவிரமாக இருக்காது. புதிய உருமாற்றம் அடைந்தவைரஸ்  அதிக தொற்றைப் பரப்ப அவற்றின்உருவாக்கமும் தீவிரமாக இருக்க வேண்டும்.எனவே, தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதன் மூலம் எதிர்கால அலைகளை நிச்சயம் தடுக்க முடியும். நாங்கள் நடத்திய ஆய்வில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது நிரூபணமாகிறது. ஆனால், இரண்டாவது அலை அளவுக்கு பாதிப்பு இருக்காது. இதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 27 அன்று 50  ஆயிரத்து 040 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 57 ஆயிரத்து 944  பேர் மீட்கப்பட்டுள்ளனர்.  மீட்பு விகித மும் 96.72 சதவீதமாக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.31 சதவீதமாக உள்ளது. மருத்துவமனைகளில்  சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து  வருகிறது என்று ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

;