tamilnadu

img

களப் பணியாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 16- கொரோனா தடுப்பு பணியில் ஈடு பட்டுள்ள முன்களப் பணியாளர்கள் அனை வருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தி உள்ளது. சென்னை மாநகராட்சியில் 28 சிறுசிறு துறைகளை உள்ளடக்கி 7 பிரதான துறை களும், 15 மண்டல அலுவலகங்களும் உள்  ளன. இந்த துறைகளில் 3ஆம் நிலை ஊழி யர்களாக 5,241 பேர், 4ஆம் நிலை ஊழியர்க ளாக 10,524 பேர் என  15 ஆயித்து 765 பேர்  நிரந்தர ஊழியர்களாக உள்ளனர். இதுதவிர தற்காலிக, மதிப்பூதியம் (என்எம்ஆர்), தேசிய நகர்ப்புற வாழ்வா தார திட்ட (என்யுஎம்எல்), ஒப்பந்த தொழி லாளர்கள், ராம்கே, டேட்டா என்ட்ரி ஆப்ரேட்  டர் என 16 ஆயிரத்து 229 பேரும், கொரோனா தடுப்பு பணிக்காக தொகுப்பூதியத்தில் 13  ஆயிரம் களப்பணியாளர்களும் பணிபுரி கின்றனர். ஒட்டு மொத்தமாக மாநகராட்சி யில் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக சுமார்  32,500 பேர் உள்ளனர்.  மாநகராட்சியில் மொத்தமாக நிரந்தரம், நிரந்தரமற்ற தொழி லாளர்கள் என 47,974 பேர்  பணியாற்றுகின்றனர். இவர்கள் அனைவருமே கொரோனா தடுப்பு பணியில் முன்களப்பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.  ஆனால், நிரந்தர ஊழியர்களுக்கு மட்டும்  கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட தற்கான பாராட்டு சான்றிதழை மாநகராட்சி வழங்கி வருகிறது.

இதற்கு சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்கம் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.சீனிவாசுலு, மாநக ராட்சி ஆணையர் மற்றும் சுகாதார இணை  ஆணையர் ஆகியோரிடம் மனு அளித் துள்ளார். அதில், கொரோனா வைரஸ் தடுப்பு பணி யில் ஈடுபட்டு வரும் துப்புரவு, மலேரியா, தினக்கூலி, என்எம்ஆர், என்யுஎல்எம், அம்மா உணவகம், ஒப்பந்த தொழிலாளர்கள் என களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் பாராட்டு சான்றிதழ் வழங்குவது முரண்பாடாக உள்ளது. எனவே, களப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டு  சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

;