tamilnadu

img

செலவுகளை குறைக்க தமிழக அரசு அரசாணை

சென்னை:
ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக்கூறி, அரசின் மொத்த செலவில் 20 சதவீதம் அளவுக்கு குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: 

அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவு பரிசுகள் வழங்குவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது.  மாநிலத்திற்கு வெளியே அதிகாரிகள் விமானத்தில் சென்றாலும் ரயில் கட்டணத்திற்கு இணையான கட்டணம் மட்டுமே அனுமதிக்கப்படும். அரசு செலவில் வெளிநாடு பயணத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. விளம்பரச் செலவுகளை 25 சதவீதம் குறைத்துக்கொள்ளவும் அரசு துறைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.  மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தேவைகளுக்கு வாங்குவது 50 சதவீதம் வரை குறைக்கப்பட வேண்டும். நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.  மதிய விருந்து, இரவு விருந்துகள் ஆகியவற்றையும் அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்.உபகரணங்களை கொள்முதல் செய்வதில் சுகாதாரம் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;