tamilnadu

img

குமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை:... நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம்

நாகர்கோவில்:
வங்க கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகி வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் ஞாயிறன்றும், திங்களன்றும் மழை நீடித்து வருகிறது.பல்வேறு இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இந்த மழையால் தற்போது அணைகளுக்கான நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 32 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 599 கன அடிதண்ணீர் வந்தது. அணையில் இருந்து 521 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெருஞ்சாணி அணை நீர் மட்டம் 67.00 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 501 கன அடிதண்ணீர் வந்தது. இந்த நிலையில் ஞாயிறன்றுகாலை பெருஞ் சாணி அணையும் திறக்கப்பட்டது.

முதற்கட்டமாக 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சிற்றார் 1, 10.73 அடியாகவும், சிற்றார் 2 10.82 அடியாகவும் உள்ளது. பொய்கை 9.70, மாம்பழத்துறையாறு 53.72 அடியாக உள்ளது. மழை அளவை பொறுத்தவரை பேச்சிப்பாறையில் 17.2 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. பெருஞ்சாணி 5.8, சிற்றார் 1, 20,சிற்றார் 2, 26, புத்தன் அணை 5, முள்ளங்கினாவிளை 5. ஆனைக்கிடங்கு 6.4, குளச்சல் 4.6,  குருந்தன்கோடு 9.2, அடையாமடை 3, கோழிப்போர்விளை 4, நாகர்கோவில் 12, பூதப்பாண்டி 3.2, சுருளோடு 7, கன்னிமார்1.4, ஆரல்வாய்மொழி 2, மயிலாடி 12.2, பாலமோர் 28.4, கொட்டாரம் 4.2,  இரணியல் 4 மில்லி மீட்டர் மழைபெய்துள்ளது.நாகர்கோவிலில் ஞாயிறன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மதியத்துக்கு பின் மழைபெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு வரை விட்டு, விட்டு மழைபெய்ததது. இந்த மழை காரணமாக பல்வேறுஇடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. தொடர்மழை காரணமாக கன்னிப்பூவில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் அவை நீரில்மூழ்கிவிடுமோ என்கிற தவிப்பில் உள்ளனர்.

;