tamilnadu

img

பழங்குடியின மக்களை ஆட்சியாளர்கள் அலைக் கழிப்பதற்கு முடிவு கட்டுவோம்

திருவள்ளூர் சிறப்பு கருத்தரங்கில் பெ.சண்முகம் பேச்சு

திருவள்ளூர், அக். 14- மெய்த்தன்மை அறிதல்  என்ற பெய ரில் பழங்குடியின மக்களை அலை கழிப்பதற்கு முடிவு கட்டுவோம் என்று ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் மாநில அமைப்பாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  பொதுச் செயலாளருமான பெ.சண் முகம் கூறினார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் “பழங்குடி மக்கள் எதிர்  நோக்கும் சவால்கள்” என்ற தலைப் பில் மாநில அளவிலான சிறப்புக் கருத்  தரங்கம் திருவள்ளூரில் ஞாயிறன்று (அக். 13) நடைபெற்றது. இதில்   பெ. சண்முகம் பேசுகையில், இருளர் இன மக்கள் ஏரிக்கரை, சாலை ஓரங்களில், நீர்நிலை புறம்போக்குகளில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்தி ரத்திற்கு பின்பும் கடந்த 73 ஆண்டு களாக அந்த மக்கள் இப்படியேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆட்சியாளர்கள் நாங்கள் அந்த மக்களுக்கு பட்டா வழங்கிக் கொண்டிருக்கிறோம். வருடா வரு டம் வீடு கட்டிக் கொடுத்துக் கொண்டி ருக்கிறோம் என கூறுகிறார்கள். அப்படி யென்றால் கட்டப்பட்ட வீடுகளும், பட்டாவும் யாருக்கு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்.

இருளர் இன மக்கள் 4 பக்கமும் கீற்று ஓலை கட்டி, டிஜிட்டல் பேனரை  மேற்கூரையாக போட்டு, கதவுக்கு பதி லாக கோணிப்பையை போட்டு மூடி 10க்கு 10 அறையில் வாழ்கிறார்கள். இதற்கு பட்டா கேட்டால் கோட்டாட்சி யரும், வட்டாட்சியரும் ஆயிரம் சட்டம்  பேசி தர மறுக்கிறார்கள்.  நீர் நிலை களில் அலுவலகத்தை கட்டிக் கொண்ட மாவட்ட ஆட்சியர் நீர் நிலை  புறம்போக்கில் வசிக்கும் இந்த மக்க ளுக்கு பட்டா வழங்க முடியாது என்  றும், ஆக்கிரமிப்பாளர்கள் என்று  கூறி அவர்களை அப்புறப்படுத்துவது என்ன நியாயம் என கேள்வி எழுப்பி னார். எனவே பயன்பாட்டில் இல்லாத நீர்நிலை புறம்போக்குகளில் வசிப்ப வர்களுக்கு அரசு உடனடியாக பட்டா  வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றார்.

அரசு மலைவாழ் மக்கள் பிரச்சனை  என்றாலே மெத்தனமாக இருப்ப தற்கு காரணம் அவர்கள் 1 விழுக்காடு,  அவர்களை விலை கொடுத்து வாங்கி  விடலாம் என கேவலமாக நினைக்கி றார்கள். முக்கியமான அரசியல் கட்சி கள் ஆதிவாசி மக்கள் குறித்த எந்த பிரச்சனையையும் பேசுவதில்லை, கவலைப்படுவதில்லை, குரல் கொடுப்  பதில்லை. காரணம் நாம் எண்ணிக்கை யில் குறைவாக இருக்கிறோம் என  நினைத்து நம்மை அலட்சியப்படுத்து கிறார்கள். ஆதிவாசி மக்கள் பிரச் சனை குறித்து குரல் கொடுக்கும் ஒரே  இயக்கம் செங்கொடி இயக்கம் மட்டும்தான் என்று சுட்டிக் காட்டினார். படித்து முடித்து வேலைக்கு சென்  றால், 30 ஆண்டுகளாக பணி முடித்து  ஓய்வு பெறும் போது சான்றிதழ் மெய்த்  தன்மை அறிதல் பணி முடியவில்லை எனக் கூறி ஓய்வூதிய பணப் பலன் களை வழங்க மறுக்கிறது அரசு. ஒரு சான்றிதழின் மெய்த் தன்மையை அறிய அரசுக்கு 30 ஆண்டுகாலம் தேவையா ? தமிழகம் முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் பணி ஓய்வு பெற்றும் இதுவரை பணப்பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே ஒன்றி ரண்டு ஆண்டுகளில் சான்றிதழின் மெய்த்தன்மையை கண்டறியுங்கள், இல்லையென்றால் ஓய்வுபெறும் போது முழு பணப்பலன்களையும் வழங்க மத்திய, மாநில அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் அந்த ஊழியர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்தார்.

பி.டில்லிபாபு 

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு பேசுகையில், மலைப்பகுதி களில் இருந்து பட்டா இல்லாத வர்களை வெளியேற்றலாம் என  உச்சநீதிமன்றம் கூறியது. இதற்கெதி ராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 9 பேர்  உயிரிழந்தனர். அதன்பிறகு நீதி மன்றமே அந்த தீர்ப்பை நிறுத்தி வைத்தது. பழங்குடியின மக்களும், தலித் மக்களும் தங்களின் வாழ்வு ரிமையை பெறுவதற்காக கடுமை யான போராட்டங்களை நடத்த வேண்டி இருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரி மையை கூட மத்தியஅரசு வழங்க மறுக்கிறது. போராடிப் பெற்ற ‘வன உரிமைச் சட்டம் 2006’ஐ  முற்றிலுமாக ஒழித்துகட்டும்  வகையில் புதிய சட்ட  திருத்தத்தை கொண்டுவர பாஜக அரசு முயற்சிக்கிறது. அதை கைவிட்டு 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.

ஏ.வி.சண்முகம்

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் மத்தியக் குழு  உறுப்பினர் ஏ.வி.சண்முகம் பேசுகை யில், குறவன், வேட்டைக்காரன் இன  மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த 25  ஆண்டுகளுக்கும் மேலாக போராடி  வருகிறோம். இந்த கோரிக்கை குறித்து  அரசுக்கு கடிதம் எழுதியது மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த என்.வரத ராஜன் மட்டும்தான். வேறு எந்த அரசி யல் கட்சித் தலைவர்களும் இந்த கோரிக்கை குறித்து பேசியது இல்லை என்றார்.

பாபுராவ்

அகில இந்திய இணை அமைப்பா ளர் பாபுராவ் பேசுகையில், மலை களில் வசிக்கும் ஆதிவாசி மக்களால் தான் வனங்களை பாதுகாக்க முடியும்.  அவர்களுக்கு மட்டும்தான் வனத்தை  பாதுகாக்கத் தெரியும். அந்த மக்  களை அங்கிருந்து அப்புறப்படுத்தி னால் கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். ஆதிவாசி மக்களை  வனத்தில் இருந்து வெளியேற்றிவிட்டு அந்த இயற்கை, கனிம வளங்களை தனியார் பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்க்க மத்திய அரசு முயற் சிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, இயற்கை வளங்கள்  அழியும்.  உத்தர்கண்ட், பீகார், மகா ராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்க ளில் மலைகளை தனியாரிடம் வழங்கி யதால் கடும் அழிவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

இரா.சரவணன்

மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் பேசுகையில், 122 சமூ கங்களை பழங்குடியினர் பட்டிய லில் இருந்து நீக்கி, ஓபிசி பிரிவிற்கு  மாற்றி 10 விழுக்காடு இட ஒதுக்கீடு  அளிக்கிறோம் என பாஜக அரசு  ஏமாற்றுகிறது. மேலும் வன உரி மைச் சட்டத்தை பாஜக முடக்க நினைக்  கிறது. அதிமுக அரசும் அதற்கு துணை போகிறது. எனவே நம்மை பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களுக்கு நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்த லில் பாடம் புகட்ட வேண்டும். நமக்காக  குரல் கொடுக்கும் செங்கொடி இயக்கத்  தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண் டும் எனக் கேட்டுக் கொண்டார்.

எஸ்.கோபால்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் பேசுகையில், பழங்குடி யின மக்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் உள்ளேயே நுழைய முடி யாது என்ற நிலையை மாற்றி, ஆட்சி யர் முன் அமரவைத்து பேச்சு வார்த்தை நடத்திய ஒரே அமைப்பு செங்கொடி இயக்கம்தான். மழை வெள்ளம் வந்தால் முதலில் பாதிக்கப்படுவது பழங்குடியின மக்கள்தான். ஆண்டாண்டு காலமாக  வாழும் பழங்குடியின மக்களை  கண்டுகொள்ளாத ஆட்சியாளர்க ளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு உரிய பாடம் புகட்டுவோம். உங்களின் அனைத்து கோரிக்கைகளும் வெற்றி பெற மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றார்.

இதில் மாநிலப்பொருளாளர் ஏ. பொன்னுசாமி, விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் பி.துளசிநாரா யணன், மாநில துணை அமைப்பாளர் டி.ராஜூ, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.குமரவேல், சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினர் பி.சுந்தர்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழரசன் வர வேற்றார். மாவட்டத் தலைவர் டி. சின்னதுரை நன்றி கூறினார்.




 

;