tamilnadu

img

கொரோனா பரவல் : கதறும் சுற்றுலா நிறுவனங்கள்

புதுதில்லி:
கொரோனா பரவலால் பயணம்,  சுற்றுலாத் துறையில் செயல்படும் சுமார் 40 சதவீத நிறுவனங்கள் அடுத்த 3 முதல் 6 மாதங்களில் முழுமையாக முடங்கும் அபாயத்தில் உள்ளன என்று போட் சென்டிமென்ட் டிராக்கர் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
போட் டிராவல் சென்டிமென்ட் டிராக்கர் கணக்கெடுப்பு ஆன்லைனில் பத்து நாட்களில்  2,300 க்கும் மேற்பட்ட பயண மற்றும் சுற்றுலா வணிக உரிமையாளர்கள் மற்றும் நிறுவன பிரதிநிதிகளுடன் நேர்காணல் நடத்தியது.அதனடிப்படையில் 81 சதவீத சுற்றுலா நிறுவனங்கள் தங்கள் வருவாயில் 100 சதவீதம் வரை இழந்துள்ளன. 15 சதவீத நிறுவனங்களின் 75 சதவீத வருவாய் சரிவடைந்துவிட்டது.

36.8 சதவீத சுற்றுலா நிறுவனங்கள் பணிகளை சுருக்கிக்கொள்ளப்போவதாகவும்,  37.6 சதவிகித நிறுவனங்கள் நிச்சயமற்ற தன்மையையும் கொண்டுள்ளன எனத் தெரிய வந்துள்ளது.சுற்றுலாத்துறையை நம்பியுள்ள தொழிலாளர்களில் பலரை முழுமையாக பணியிலிருந்து நிறுத்துவது, ஊதியத்தை வெட்டுவது, சம்பளம் வழங்காமல் தாமதிப்பது, ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இறங்க உள்ளன. 
கொரோனா நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் பிழைப்புக்கு அரசாங்கம் சிறிது நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய பயண முகவர்கள் சங்கத் தலைவர் ஜோதி மாயல் கூறியுள்ளார். இதற்கிடையில் 78.6 சதவீத சுற்றுலா நிறுவனங்கள் மோடி அரசு சுற்றுலா நிவாரண நிதியை உருவாக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர்.

;