tamilnadu

img

சிபிஎம் மதுரை, திண்டுக்கல் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்!

திமுக தலைமையில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் இன்று வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் திமுக கூட்டணியில் மதுரையில் மீண்டும் சு.வெங்கடேசனும், திண்டுக்கல்லில் ஆர்.சச்சிதானந்தம் போட்டியிடுகின்றனர். 
இந்த நிலையில் மதுரை மக்களவைத் தொகுதியில் மீண்டும் சு.வெங்கடேசன் அம்மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இன்று காலை தனது வேட்புமனுவைத்  தாக்கல் செய்தார். அதேபோல், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அம்மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். 
 

;