tamilnadu

img

முடியாததல்ல... - ப.முருகன்

வெல்லப்பட முடியாதவரல்ல மோடி
நரேந்திர மோடி
வீழ்த்தப்பட முடியாததல்ல ஆட்சி
பாஜக ஆட்சி             (வெல்லப்)
வேரறுக்கப்பட முடியாததல்ல விருட்சம்
விஷவித்து விருட்சம்
வெறுக்கப்பட முடியாததல்ல பரிவாரம்
ஆர்எஸ்எஸ் பரிவாரம்         (வெல்லப்)
நிறுத்தப்பட முடியாததல்ல கலவரங்கள்
காவிகளின் கலவரங்கள்
நெருங்கிட முடியாததல்ல நேசகுணங்கள்
மனிதரின் நேசகுணங்கள்     (வெல்லப்)
தடுத்திட முடியாததல்ல புல்டோசர்கள்
யோகியின் புல்டோசர்கள்
சரித்திட முடியாததல்ல சகுனி வேலைகள்
சங்பரிவார் சகுனிவேலைகள்     (வெல்லப்)
அகற்றப்பட முடியாததல்ல அடக்குமுறைகள்
அதிகார அடக்குமுறைகள்
அடக்கப்பட முடியாததல்ல வெறியாட்டங்கள்
வன்முறை வெறியாட்டங்கள்     (வெல்லப்)
களைந்திட முடியாததல்ல கள்ள உறவு
காவி கார்ப்பரேட் கள்ள உறவு
அணைத்திட முடியாததல்ல கலவரத் தீ
காவி இந்துத்துவா கலவரத் தீ     (வெல்லப்)
ஒழித்திட முடியாததல்ல ஊழல்கள்
தேர்தல் பத்திர ஊழல்கள்
அழித்திட முடியாததல்ல அத்துமீறல்கள்
அதிகார அத்துமீறல்கள்
                (வெல்லப்)
நீக்கப்பட முடியாததல்ல நீசத்தன ஆட்சி
நெறியற்ற நீசத்தன ஆட்சி
போக்கப்பட முடியாததல்ல பொல்லாத ஆட்சி
போக்கிரிகளின் பொல்லாத ஆட்சி
                (வெல்லப்)
துடைத்திட முடியாததல்ல துயரங்கள் 
மக்களின் துயரங்கள்
படைத்திட முடியாததல்ல மகிழ்வுகள்
மனங்களில் மகிழ்வுகள்
                (வெல்லப்)
கொள்ளப்பட முடியாததல்ல கோபம்
கொந்தளிக்கும் கோபம்
அள்ளப்பட முடியாததல்ல ஆதரவு
ஆர்ப்பரிக்கும் ஆதரவு
                (வெல்லப்)
காக்கப்பட முடியாததல்ல தேசம்
இந்திய தேசம்
ஆக்கப்பட முடியாததல்ல நேசம்
ஒற்றுமை நேசம்
                (வெல்லப்)
எண்ணப்பட முடியாததல்ல சதிவலைகள்
சங்கிகளின் சதிவலைகள்
பின்னப்பட முடியாததல்ல பாசவலைகள்
சகோதரப் பாசவலைகள்
                (வெல்லப்)
ஒன்றாக முடியாததல்ல எண்ணம்
மக்களின் எண்ணம்
நன்றாக முடிந்திடுதல் திண்ணம்
நாடெங்கும் திண்ணம்
                (வெல்லப்)
ஈடேற முடியாததல்ல ஆட்சி
இந்தியா அணி ஆட்சி
எய்திட முடியாததல்ல எழுச்சி 
ஒருங்கிணைந்த எழுச்சி
                (வெல்லப்)

;