world

img

ஜெர்மனியில் கன மழை - பலி எண்ணிக்கை 120 ஆக உயர்வு

ஐரோப்பிய நாடுகளான பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்துள்ளனர்.  

ஜெர்மனியின் ரைன்லெண்ட் பலட்டினேட் மாகாணத்தில் வெள்ளம் காரணமாக, 50 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். அண்டை மாகாணமான நார்த் ரைன் வெஸ்ட்பாலியாவில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். கன மழை காரணமாக ஜெர்மனியில் மட்டும் 1500 பேர் காணாமல் போயுள்ளதாகக் கூறப்படுகிறது. சாலைகள் சேதமடைந்து உள்ளதாலும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாலும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மீட்புப் பணிகளில் உதவுவதற்கான 900 வீரர்களை ஜெர்மனி ராணுவம் அனுப்பியுள்ளது. 

பெல்ஜியத்தில் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. அந்த நாட்டில் 5 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் பயணங்களைத் தவிர்க்குமாறு பெல்ஜியம் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே, சுவிட்சர்லாந்தில் தொடர்ந்து பெய்த மழையால் பல ஆறுகள் மற்றும் ஏரிகளின் கரைகள் உடைந்தன. இதன் காரணமாக ஷ்லெதீம், பெக்கிங்கன் ஆகிய கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

;