tamilnadu

img

அவதிக்குள்ளான மக்களுக்கு அற்பத்தொகை... பெரும் கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்குவிப்பு

புதுதில்லி:
பிரதமர் 20 லட்சம் கோடி ரூபாய் என்று படாடோபமாக அறிவித்த நிவாரணத் தொகுப்பு என்னென்ன என்று மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ள ஐந்தாவது மற்றும் கடைசி சுற்று அறிவிப்புகள், இவர்கள் எந்த அளவிற்கு அவதிக்குள்ளாகி இருக்கும் மக்கள்மீது இதயமற்ற முறையில்கொடூரமாக நடந்துகொண்டிருக் கிறார்கள் என்பதைக்காட்டு கின்றன. பசி-பஞ்சம்-பட்டினியில் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உடனடி நிவாரணத்திற்கு எதுவுமே இவற்றில் இல்லைஎன்று சிஐடியு தெரிவித்துக் கொள்கிறது.இதுதொடர்பாக சிஐடியு அகில இந்திய பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாயில், நேரடியாக உடனடி ரொக்கம் மற்றும் உணவுநிவாரணமாக, வேலையற்ற, வருமான மற்ற, தங்குமிடமற்ற, கோடானுகோடி உழைக்கும் மக்களுக்குமிகவும் அற்ப சதவீதத் தொகையே அறிவிக்கப்பட்டிருக்கிறது.பல லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்விதமான உதவிகளுமின்றி குடிசை களில் அடைத்து வைக்கப்பட்டிருக் கிறார்கள் அல்லது மிகவும் சோர்வுடன் நெடுஞ்சாலைகளில் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.  இவர்கள் போகிற வழியில் பசி-பஞ்சம்-பட்டினியால் இறப்பதும், பல இடங்களில் போலீசாரின் கொடூரமான தடியடிப் பிரயோகங்களுக்கும் ஆளாவதும் நடந்துகொண்டிருக்கிறது.

மனிதாபிமானமற்ற பாஜக அரசு
மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் சாமானிய மக்கள் கண்ணியமாக வாழக்கூடிய விதத்தில் அடிப்படைத் தேவைகளைக்கூட அளித்திட மறுக்கிறது.  சாமானிய மக்களுக்கு உதவுவதாகக் கூறிக் கொண்டு கடந்த சில நாட்களாக நிதியமைச்சர் அறிவித்த சீர்திருத்தங்கள் அனைத்தும், பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளையும் நிரந்தரமாக ஒருசில பெரும் அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட்டுகள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்களிடமும் தாரை வார்த்திடும் விதத்திலும், அவர்கள் கொள்ளை லாபம் ஈட்டி, தொழிலாளர்களைத் தங்கள் இஷ்டம் போல் சுரண்டும் விதத்திலும் அமைந்துள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி நிதித்தொகுப்பில் அவதிப்படும் மக்களுக்கு நேரடி ரொக்கப் பரிமாற்றம் மற்றும் உணவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை என்பது 10 சதவீதம் கூட கிடையாது.

இவர்கள் அவ்வாறு அறிவித்துள்ள நேரடி ரொக்கம் மற்றும் உணவுக்கான ஆதரவு நடவடிக்கைகளும்கூட அவை தேவைப்படும் மக்களில் 80 சதவீதத் தினருக்குப் போய்ச் சேரவில்லை. இவர்கள் அறிவித்துள்ள நிதித்தொகுப்பில் பாதி அளவிற்கு இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து வருகிறதேயொழிய, அரசாங்கத்தின் கஜானாவி லிருந்து வரவில்லை. தொழில்நிறுவனங் களுக்கும், நுண்ணிய சிறிய நடுத்தர தொழில் ல்பிரிவுகளுக்கும் மற்றும் வேளாண்மைக்கும் அறிவித்துள்ளவற்றில் பெரும்பகுதி வர விருக்கும் நாட்களில் கடன்கள் வடிவத்தில் மற்றும் நிதிநிறுவனங்களிடமிருந்து முன்பணம் பெறும் விதத்திலுமே இருக்கின்றன. இவையும் இவர்களை உடனடியாகப் போய்ச் சேராது. இவ்வாறு நாட்டின் பெரும்பான்மை மக்களின் உயிர்வாழ்வதற்கான தேவைகளையே இந்த அரசு ஒட்டுமொத்தமாக உதாசீனம் செய்திருக்கிறது. மக்களுக்கு நேரடி ரொக்கப் பரிமாற்றமும், கடன் தள்ளுபடியும் தேவையாக இருக்கக்கூடிய சமயத்தில், இவ்வாறு தாராளமாகக் கடன் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது எவ்விதத்திலும் உதவிடாது.  

மேலும், ஊழியர் பிராவிடண்ட் நிதியி லிருந்து திரும்பப்பெறும் ஷரத்துக்கள் தொடர் பாக அல்லது கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரொக்க உதவி அளிப்பது தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் அவர்கள் மீதான வஞ்சனை மற்றும் மோசடி வேலைகளே தவிர வேறல்ல. இதில் உள்ள நிதி முழுமையாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் சொந்தப் பணமேயன்றி, அரசாங்கத்தால் செலுத்தப் பட்டவை அல்ல.

பொருளாதாரத்தை அழிக்கும் அரக்கத்தனமான அறிவிப்பு
இத்துடன், அரசாங்கம் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் பலவற்றை அரக்கத்தனமான முறையில் தொடர்ச்சியாக அறிவித்திருக்கிறது. இவை நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்து வதற்கு மாறாக, பொருளாதாரத்தை முற்றிலு மாக அழித்து ஒழித்துவிடும் பாதையில் தள்ளி விடும். அவை நமது உற்பத்தி வல்லமையை (manufacturing capability) அழித்துவிடும். படிப்படியாக தொழில்மயமின்மையைக் (deindustrialisat6ion) கொண்டுவரும். சுயசார்பு (self-reliance) என்ற பெயரில் அந்நிய நேரடி முதலீடு போன்றவற்றில் தாராளமய நடவடிக்கைகள் அந்நிய நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை ஆதிக்கம் செலுத்து வதற்கே இட்டுச் செல்லும்.

பல துறைகளில் அந்நிய நிறுவனங்கள் நேரடியாகவே கையகப்படுத்துவதற்கும் அறிவிப்புகள் செய்யப்பட்டிருக்கின்றன.  இது நம் சுயசார்புக்கே ஆபத்தாக முடியும். இவ்வாறு சுயசார்புக் கொள்கையை அரிக்கும் ஆபத்தான போக்குடன், நம் கேந்திர மான பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றை யும் தனியாருக்குத் தாரை வார்க்க அறி விப்புகள் வெளியாகி இருக்கின்றன. நாட்டில் மிகவும் முக்கியமான மருந்துத்துறை, பாது காப்புத்துறை போன்றவற்றில் ஏற்கனவே அவசரச்சட்டங்கள் மூலமாக படிப்படியாக தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  இப்போது இதே திசைவழியில் நிலக்கரி, விமானப்போக்குவரத்துத்துறை, மத்திய மின்சார நிறுவனங்கள், கப்பல்கட்டும் தளங்கள், ரயில்வே உற்பத்திப் பிரிவுகள் முதலான வற்றையும் தனியாருக்குத் தாரை வார்த்திட முடிவு செய்திருக்கிறார்கள்.

இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்கள் மீதான இவர் களின் நாசகரக் கொள்கைகள், தனியார் நிறு வனங்களுக்கும், இப்போது பொதுத்துறை நிறு வனங்களுக்குள் செயல்பட்டுவரும் ஒப்பந்த நிறுவனங்களுக்கும்தான் ஆதாயம் அளித்திடும். இவர்களின் குறிக்கோள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வரைபடத்தில் பொதுத்தறை நிறுவனங்கள் என எதுவும் இருக்கக்கூடாது. மாறாக அழிக்கப்பட்டுவிட வேண்டும் என்பதேயாகும்.

மக்களுக்கு துரோகம் செய்யும் அறிவிப்புகள்
இவ்வாறு மத்திய நிதியமைச்சர் அறி வித்துள்ள அனைத்தும் நாட்டின் நலன்களுக்கும், நாட்டு மக்களின் நலன்களுக்கும் துரோகம் செய்வனவாகும். இவை அனைத்தும் சர்வ தேச நிதி மூலதனத்திற்கும், இந்திய கார்ப்ப ரேட்டுகளுக்கும் சேவகம் செய்வதற்கான வைகளேயாகும். அவர்களின் இளைய பங்காளியாகத் தன்னை மாற்றிக்கொள்வதற் கானதேயாகும். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சமூக முடக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பாஜக அரசாங்கம், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாசத்தை ஏற்படுத்தும்விதத்தில் எதேச்சதிகார மற்றும் ஜனநாயக விரோத அணுகுமுறையைக் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறது.

ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அறைகூவல்
மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகள் நாட்டின் நலன்களுக்கு விரோதமானவை என்றும் அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யக்கூடிய நவீன தாராளமய நாசகரச் சீர்திருத்தங்களே என்றும் சிஐடியு கண்டனத்தை தெரிவிக்கிறது. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அனைவரும் சங்கவித்தியாசம் இன்றி ஒன்று பட்டுப் போராட முன்வரவேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது. நாட்டின் சுயசார்பைப் பாதுகாத்திடவும், நாட்டு மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ் வாதாரங்களைப் பாதுகாத்திடவும் தயாராக வேண்டும் என்று நாட்டு மக்கள் அனைவரையும் சிஐடியு அறைகூவி அழைக்கிறது.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.       (ந.நி.)

;