tamilnadu

img

தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு...

சென்னை:
தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சிமற்றும் வெப்ப சலனம் காரணமாகசெவ்வாயன்று நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.நீலகிரி, கோவை, தேனி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப் புரம், நாகப்பட்டினம், மயிலாடு துறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும்.11 ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற் றும் புதுவை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.12, 13 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட் டங்களில் கனமழை பெய்யும்.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

;