tamilnadu

img

தமிழ் எங்கே மிஸ்டர் மோடி!

இந்த தேர்தலின் பொழுது மிக அதிகமாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். தான் தமிழனாக பிறக்கவில்லையே  எனும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களை நேசிப்ப தாக கூறிக்கொண்டார். ஆனால் பாஜக தேர்தல் அறிக்கையில்  தமிழ் அல்லது தமிழ்நாடு எனும் வார்த்தை ஒரு முறை கூட சொல்லப்படவில்லை.  திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை உலகம் முழுவதும் நிறுவப்போவதாக தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஏன் இந்திய பல்கலைக் கழகங்களில் அல்லது இந்திய மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை அமைக்க தேர்தல் அறிக்கை எதுவும் சொல்லவில்லை? ஏனெனில் திருவள்ளுவர் கூறும் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” எனும் கோட்பாடுக்கும்  மனுஸ்மிருதி கூறும் ஏற்றத்தாழ்வுக்கும் உள்ள முரண்பாடுகள் வெளிச்சத்துக்கு வரும். மனுவின் ஏற்றத்தாழ்வுகள் அம்பலமாகும்.  மேலும் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் எதற்காக அமைக்கப்படுமாம்?  யோகா/ ஆயுர்வேதம் ஆகிய பழங்கால பாரதிய பண்பாடு பிரபலப்படுத்தவாம்! திருவள்ளுவர் யோகா குறித்து எதுவும் சொல்லவில்லை. திருவள்ளுவரின் கோட்பாடுகளை சிதைக்கும் முயற்சி இது! “அனைத்து இந்திய செம்மொழிகளையும் கல்வி நிலையங்களில் கற்பதற்கு ஊக்கப்படுத்தப்படும்” என தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால் அதே 

பாரதிய சமஸ்கிருத கோஷ்” அமைக்கப்படும் எனவும் கூறுகிறது.
சமஸ்கிருதத்திற்கு மட்டும் ஏன் இந்த அதீத விசேட சலுகை?
2017-22 ஆகிய 5 ஆண்டுகளில் செம்மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை:

    தமிழ்-       ரூ. 22.94 கோடி
    தெலுங்கு- ரூ. 3 கோடி
    கன்னடம்- ரூ. 3 கோடி.

ஆனால் இதே காலகட்டத்தில் சமஸ்கிருதத்துக்கு ரூ. 1074 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ் உட்பட இந்திய செம்மொழிகளுக்கு உதட்டளவில் புகழ்பாடிவிட்டு சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. சமஸ்கிருதம் என்பது ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் “ஒரே தேசம்-ஒரே மொழி” என்பதன் வெளிப்பாடு! கச்சத்தீவு குறித்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்த பாஜக அது குறித்தும் ஒரு வார்த்தை கூட தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லை. திட்டம் போட்டு அரசியல் ஆதாயத்துக்காக கச்சத்தீவு பிரச்சனை எழுப்பப்பட்டது என்பது தெளிவு.

தமிழ்நாட்டுக்கு மோடியின் “கியாரண்டி” முற்றிலும் மோசடி!
தமிழையும் தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும்
பாஜகவை தோற்கடிப்போம்!

 

;